“ஒரு உலகம் – ஒரு நாட்காட்டி” – ஆங்கில அடிப்படை நாட்காட்டி
அ. நாட்காட்டியின்
அடிப்படைகள்
ஒரு உலகத்திற்கு ஒரு
நாட்காட்டிதான் இருக்க வேண்டும், அந்த நாட்காட்டி அடிப்படையான
நாட்காட்டியாக இருக்க வேண்டும். ஒரு அடிப்படை நாட்காட்டி வானியல் (astronomy)
தொடர்பானதாக மட்டும் இருக்க வேண்டும். தற்போது
ஒவ்வொரு மொழிக்கும், தமிழ் உட்பட, அந்தந்த மொழிக்கு தனித்தனியாக ஒரு நாட்காட்டி
உள்ளது. இந்த நாட்காட்டிகள் அடிப்படை நாட்காட்டிகளாக இல்லை. சோதிடத்தினையும், இராசிகளையும் நாட்காட்டியில்
புகுத்திடுதல் (astrology and Zodiac signs) சரியல்ல.
அவைகளைத் தனியாக கணக்கிட்டு அவரவர் கொள்கைப்படி எதிர் காலப் பலன்களைக் கூறலாம்.
தற்போது ஆண்டின் தொடக்க நாள் ஒவ்வொரு நாட்காட்டிக்கும் வேறுவேறாக உள்ளது. அதன்
விவரங்களைக் கீழே உள்ளன.
ஆ. இந்திய தேசிய நாட்காட்டி
இந்திய தேசிய நாட்காட்டியில் ஆண்டுத் தொடக்கம், சைத்திரா – 1 (Chaitra 1 - மார்ச்சு
21) அன்று வருகின்றது. இந்திய
தேசிய நாட்காட்டியை இராஜாங்க பஞ்சாங்கத்திற்காக” வைத்திருப்பதாக இந்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த நாட்காட்டியில் செம்மொழியாகிய சமஸ்கிருத மாதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்து மதச் சடங்குகளின்
நாட்களைத் தீர்மானிப்பதற்கு இந்த நாட்காட்டி பயன்படுத்தப்படுகின்றது. இந்த
நாட்காட்டியின் விவரங்கள் கீழே உள்ளன.
வரிசை
எண்
|
மாதம்
|
நாட்கள்
|
தொடக்க நாள்
(ஆங்கில நாட்காட்டி)
|
இராசிகள்
|
1
|
சைத்ரா
|
30/31
|
மார்ச்சு
22*
|
ஆரிஸ்
|
2
|
வைசாகா
|
31
|
ஏப்ரல்
21
|
டாரஸ்
|
3
|
ஹெயிஸ்டா
|
31
|
May
22
|
ஜெமினி
|
4
|
ஆஷாடா
|
31
|
June
22
|
கேன்சர்
|
5
|
ஷரவணா
|
31
|
July
23
|
லியோ
|
6
|
பத்ரபாதா
|
31
|
August
23
|
விர்கோ
|
7
|
அஷ்வினி
|
30
|
September
23
|
லிப்ரா
|
8
|
கார்திகா
|
30
|
October
23
|
ஸ்கார்பியஸ்
|
9
|
அக்ரகாயனா
|
30
|
November
22
|
சாகிட்டாரியஸ்
|
10
|
போசா
|
30
|
December
22
|
கேப்ரிகார்னஸ்
|
11
|
மகா
|
30
|
January
21
|
அகஸ்டியஸ்
|
12
|
பால்குணா
|
30
|
February
20
|
பீசஸ்
|
இந்த நாட்காட்டி சூரியனுக்கு
கிழக்கு/மேற்கு/மேல்/கீழ் என்ற திசைகள் வழியாகச் செல்லும் பூமியின் சுற்றுவட்டப்
பாதையை அடிப்படையாகக் கொண்டு, அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியின் கிழக்கும்
சூரியனின் கிழக்கும் ஒரே திசையாக இல்லை. 23.50 மாறுபட்டு வேறுவேறாக இருக்கின்றது.
இ. விண்மீன் இராசிகளோடு
இணைத்த நாட்காட்டிகள்:
இந்திய தேசிய நாட்காட்டியில் ஆண்டுத் தொடக்க நாளான
மார்ச்சு 21 உடன் 23 நாட்கள் சேர்த்து
ஏப்ரல் 14 அன்று தொடங்குவதாக ஒரு நாட்காட்டி
அமைக்கப்பட்டுள்ளது. இது சோதிடக்கலையும் விண்மீன் இராசிகளையும் தொடர்புபடுத்தி
அமைக்கப்பட்டுள்ளது. 12 விண்மீன் இராசிகளுக்கும், மொத்தமுள்ள 360 பாகைகளை, ஒரு
இராசிக்கு 30 பாகை என்ற அளவில் சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட
தமிழ் நாட்காட்டியின் ஆண்டு தொடக்கம் ஏப்ரல் 14 (சித்திரை 1) அன்று
வருகின்றது. இநுத விண்மீன் இராசிகள் அடிப்படையில் உள்ள நாட்காட்டியின்படி, பீகார்,
மேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம் முதலிய மாநிலங்கள், ஆண்டின் தொடக்கத்தினை ஏப்ரல்
14 அன்று வைத்துக்கொண்டுள்ளன. இந்த
நாட்காட்டி பூமி சூரியனைச் சுற்றும் முறையைப் பின்பற்றுவதாக உள்ளது. ஆந்திரப்
பிரதேசம், மகாராட்டிரம், கோவா, கர்நாடகம், முதலிய மாநிலங்கள் மார்ச்சு/ஏப்ரல்
மாதங்களில் ஆண்டின் தொடக்கம் வரும் வகையில் சந்திரன் பூமியைச் சுற்று முறையை
பின்பற்றுவதாக இந்த நாட்காட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. குஜராத், இராஜாஃத்தான் போன்ற மாநிலங்கள்
அக்டோபர்/ நவம்பர் மாதம் தீபாவளிக்கு அடுத்த நாள் ஆண்டின் தொடக்கத்தினை
வைத்துக்கொண்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மார்ச்சு 19 அன்று ஆண்டின்
தொடக்கத்தினை வைத்துக்கொண்டுள்ளது. விண்மீன் இராசிகளும் அதற்கான மாதங்களும் கீழ்க்
காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
ஈ. விண்மீன் இராசிகளின் அட்டவணை
வரிசை எண்
|
இராசி
|
தமிழ் மாதங்கள்
|
ஆங்கில மாதங்கள்
|
ஆங்கில இராசி
|
1
|
மேஷம்
(Mesha)
|
பங்குனி,
சித்திரை
|
மார்ச்சு,
ஏப்ரல்
|
ஆரிஸ்
|
2
|
ரிஷபம்
(Vrishabha)
|
சித்திரை,
வைகாசி
|
ஏப்ரல்,
மே
|
டாரஸ்
|
3
|
மிதுனம்
(Mithuna)
|
வைகாசி,
ஆனி
|
மே,
ஜூன்
|
ஜெமினி
|
4
|
கடகம்
(Karkata)
|
ஆனி,
ஆடி
|
ஜூன்,
ஜூலை
|
கேன்சர்
|
5
|
சிம்மம்
(Simha)
|
ஆடி,
ஆவணி
|
ஜூலை,
ஆகஸ்டு
|
லியோ
|
6
|
கன்னி
(Kanya)
|
ஆவணி,
புரட்டாசி
|
ஆகஸ்டு,
செப்டம்பர்
|
விர்கோ
|
7
|
துலாம்
(Tula)
|
புரட்டாசி,
ஐப்பசி
|
செப்டம்பர்,
அக்டோபர்
|
லிப்ரா
|
8
|
விருச்சிகம்
(Vrishchika)
|
ஐப்பசி,
கார்த்திகை
|
ஆக்டோபர்,
நவம்பர்
|
ஸ்கார்பியஸ்
|
9
|
தனுசு
(Dhanur)
|
கார்த்திகை,
மார்கழி
|
நவம்பர்,
திசம்பர்
|
சாகிட்டாரியஸ்
|
10
|
மகரம்
(Makara)
|
மார்கழி,
தை
|
திசம்பர்,
ஜனவரி
|
கேப்ரிகார்னஸ்
|
11
|
கும்பம்
(Kumbha)
|
தை,
மாசி
|
ஜனவரி,
பிப்ரவரி
|
அகஸ்டியஸ்
|
12
|
மீனம்
(Meena)
|
மாசி,
பங்குனி
|
பிப்ரவரி,
மார்ச்சு
|
பீசஸ்
|
உ. ஆங்கில
ஆண்டின் வரலாறு
பழங்கால ரோமன்
நாட்காட்டியின்படி ஆண்டின் தொடக்கம் மார்ச் 1 அன்று இருந்தது. ஒரு ஆண்டிற்கு பத்து
மாதங்களே இருந்தன. ரோம் இரண்டாம் மன்னர் நியூமா பாம்பிலியஸ் (Numa Pompilius), என்பவர் ஜனவரி,
பிப்ரவரி மாதங்களைக் கூட்டி ஆண்டிற்கு 12 மாதங்களாக என்று ஏற்படுத்தினார். கி.மு
46 ஆம் ஆண்டு, ரோம் மன்னர் ஜூலியஸ் சீசர் முதன் முதலாக ஜனவரி 1 ஐ ஆண்டின்
தொடக்கமாக வைத்தார். இடைக்காலத்தில், மார்ச் 25 ஆண்டின் தொடக்கம் என்றும் பிறகு
திசம்பர் 25 என்று மாற்றப்பட்டது. ஒரு
வருடத்திற்கு 365.25 நாட்கள் என்று தோராயமாக வரையறுத்து, 4 ஆண்டுக்கு ஒரு முறை
மிகை ஆண்டு (leap year) என்று வைக்கப்பட்டு
இருந்தது. 1582 ஆம் ஆண்டு வரை ஜூலியன்
நாட்காட்டி பயன்பாட்டில் இருந்து வந்தது.
ஒரு ஆண்டிற்கு 365.24219 நாட்கள் என்று அறிவியல்படி
துல்லியமாகக் கணக்கிடப்பட்டதால், இத்தாலி நாட்டு, திரு அலோசியஸ் லிலியஸ் என்பவரின்
கருத்துப்படி, ஒவ்வொரு 400 ஆண்டுகளில், முதல் மூன்று நாற்றாண்டுகளுக்கு மிகை
ஆண்டினை (leap year) இரத்து செய்து,
400 ஆண்டுகளில், 100 மிகை ஆண்டுக்குப் பதிலாக, 97 மிகை ஆண்டுகள் (leap
years) என்று தீர்மானித்து ஜனவரி
1 ஆண்டின் தொடக்கம் என்று கொள்ளப்பட்டது. இந்த திருத்திய நாட்காட்டி, அப்போதுள்ள
போப் திரு கிரிகோரி அவர்களால் 1582 – ஆம் ஆண்டு, அறிமுகம் செய்யப்பட்டது.
எனினும், திருத்திய நாட்காட்டியை இங்கிலாந்து அரசு,
ஏற்காததால் இங்கிலாந்தில் ஜூலியஸ் சீசர் நாட்காட்டியும் ரோம் நாட்டிலும் இன்னும்
சில நாடுகளிலும் மட்டும் திருத்திய
நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்தன. அதன்
பிறகு, 170 ஆண்டுகள் கழித்து, 1752 – ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு திருத்திய நாட்காட்டியை
ஏற்றுக் கொண்டது அன்று முதல் இந்த நாட்காட்டியை இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியாவும்,
பிறகு, இந்த அனைத்து நாடுகளும் படிபடியாக ஏற்றுக் கொண்டன. ஆதாரம்: விக்கிபீடியா இணையதளம் – நாட்காட்டி தலைப்பில். .
ஊ. ஆங்கில நாட்காட்டி – பன்னாட்டு நாட்காட்டி
இந்த ஆங்கில (கிருத்துவ) நாட்காட்டியானது சூரியனின் கிழக்கு
/ மேற்கு திசைகளை அடிப்படையாக் கொண்டு அமைக்கப்படவில்லை. அதனால் திசை வேறுபாடுகள்
இந்த நாட்டியில் இல்லை. இதில் சோதிடக்கலை விண்மீன் இராசிகள், எதுவும்
தேவைப்படவில்லை. பூமி சூரியனைச் சுற்றும் சுற்றுவட்டப் பாதையில் சூரியன்-பூமி அண்மைநிலையை
(perihelion) அடிப்படையாகக் கொண்டு
இந்த நாட்காட்டி அமைந்துள்ளது. ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி 2 முதல் 7 வரையில் உள்ள
எல்லைக்குள் ஏதேனும் ஒரு நாளில், சூரியன்-பூமி அண்மைநிலை ஏற்படுகின்றது. ஜனவரி 1
-ஐக் கடந்து திசம்பர் மாதம் சூரியன்-பூமி
அண்மைநிலை ஏற்படாதவாறு, திரு அலோசியஸ் லிலியஸ் என்பவரால், ஜனவரி 1 அன்று
ஆண்டு தொடங்குவதாக இந்த நாட்காடி அமைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் உள்ள
அனைத்து நாடுகளும் பொருளாதார அலுவலக நடவடிக்கைகளுக்காகவும் ஊதியங்கள்
வழங்குவதற்காகவும் இந்த நாட்காட்டி பின்பற்றப்படுகின்றது. தற்போது, இந்த ஆங்கில
நாட்காட்டியானது, உலகம் முழுவதும் அதிகாரபூர்வமாக பயன்பாட்டில் உள்ளது.
எ. “ஒரு உலகம் – ஒரு நாட்காட்டி”
வார நாட்கள் ஏழும் உலகம் முழுவதும் ஒன்றாக உள்ளது. அதாவது
ஞாயிற்றுக்கிழமை என்றால் உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையாக அவரவர் மொழியில்
அறியப்படுகின்றது. அது போல், மாதங்களும் நாட்களும் உலகம் முழுவதும் ஒன்றாக
அமையவில்லை. ஜனவரி -1 என்றால் உலகம் முழுவதும் ஜனவரி -1 ஆக அவரவர் மொழியில், அமையவேண்டும்.
தமிழ் நாட்டில் ஜனவரி 1 அன்று தை -1 என்றும், மற்ற
மாநிலங்களிலும் கீழ்க் காணும் அட்டவணைப்படி, நாட்காட்டிகள் ஒன்றுபட்டு அமைய
வேண்டும். இந்தியாவில், அலுவலக மற்றும்
பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக ஆங்கில நாட்காட்டியை திருவள்ளுவர்
நாட்காட்டியாக என்று பெயர்மாற்றம் செய்து
பயன்படுத்திடலாம்.
இதனை நடைமுறைப்படுத்துவதை
இன்னும் எளிதாக்கிட, நூற்றுக் கணக்கான ஆண்டுகளைக் கருதும் போது, 31 ஆண்டுகள்
என்பது மிகச் சிறிய அளவே இருப்பதால் திருவள்ளுவர் ஆண்டினை 31 ஆண்டுகளை, குறைத்து, ஆங்கில
நாட்காட்டி, திருவள்ளுவர் நாட்காட்டிகள் இரண்டின் தொடக்க ஆண்டினை ஒன்றாகவே இருக்குமாறு
வைத்துக் கொள்ளலாம். இராஜாங்க
பஞ்சாங்கத்திற்கான”
தேசிய நாட்காட்டி செம்மொழியாகிய சமஸ்கிருத மொழியின் மாதங்களைக் கொண்டு இருப்பதைப்
போன்று, “அலுவலக
மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான” தேசிய நாட்காட்டியாக செம்மொழியாகிய தமிழ் மொழியின்
மாதங்களைக் கொண்டு அமைவதாக இருக்கலாம். எனினும், ஆங்கில மொழியைப் பயன்படுத்தும்
போது, ஆங்கில மாதங்களையே பயன்படுத்திடலாம்.
இந்தக் கருத்தினை
வலியுறுத்தி இந்திய அரசுக்கு
தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திட வேண்டும். இந்திய அரசு இதனை ஏற்று ஆணை வழங்கி
முன்தேதியிட்டு இந்தியா முழுவதும் அமல்படுத்தி, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்
அனைத்திலும் முன்பு இருந்த ஆங்கில தேதிக்கு ஈடாக தமிழ் தேதியாக இருக்க ஆவன செய்திட
வேண்டும். திருவள்ளுவர் நாட்காட்டியை உலக அளவிலும் கொண்டு சென்றிட இந்திய அரசு,
ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள உறுப்பு நாடுகளுக்கும் உலக வங்கிக்கும், உரிய
பரிந்துரை அளிக்கலாம்.
ஏ. நாட்காட்டிகளை ஒன்றிணைக்கும் அட்டவணை
இந்தியாஈவில், ஆங்கில நான்காட்டியை திருவள்ளுவர்
நாட்காட்டி என்று மறுபெயரிடுதல்
வரிசை .எண்
|
ஆங்கில (கிரிகோரியன்) மாதம்
|
நாள்
|
தமிழ்நாடு
|
மற்ற இந்திய மாநிலங்கள்
/ இதர ஐக்கிய சபை உறுப்பு
நாடுகள்
|
||||
ஈடான மாதம்
|
நாள்
|
மொத்த நாட்கள்
|
ஈடான மாதம்
|
நாள்
|
மொத்த நாட்கள்
|
|||
1
|
ஜனவரி (January)
|
1
|
தை (Thai)
|
1
|
31
|
1 வது மாதம்
|
1
|
31
|
2
|
பிப்ரவரி (February)
|
2
|
மாசி (Masi)
|
1
|
28/29
|
2 வது மாதம்
|
1
|
28/29
|
3
|
மார்ச்சு (March)
|
3
|
பங்குனி (Panguni)
|
1
|
31
|
3 வது மாதம்
|
1
|
31
|
4
|
ஏப்ரல் (April)
|
4
|
சித்திரை (Chithirai)
|
1
|
30
|
4 வது மாதம்
|
1
|
30
|
5
|
மே (May)
|
5
|
வைகாசி (Vaikasi)
|
1
|
31
|
5 வது மாதம்
|
1
|
31
|
6
|
ஜூன் (June)
|
6
|
ஆனி (Ani)
|
1
|
30
|
6 வது மாதம்
|
1
|
30
|
7
|
ஜூலை (July)
|
7
|
ஆடி (Adi)
|
1
|
31
|
7 வது மாதம்
|
1
|
31
|
8
|
ஆகஸ்டு (August)
|
8
|
ஆவணி (Avani)
|
1
|
31
|
8 வது மாதம்
|
1
|
31
|
9
|
செப்டம்பர் (September)
|
9
|
புரட்டாசி (Puratasi)
|
1
|
30
|
9 வது மாதம்
|
1
|
30
|
10
|
அக்டோபர் (October)
|
10
|
ஐப்பசி (Iypasi)
|
1
|
31
|
10 வது மாதம்
|
1
|
31
|
11
|
நவம்பர் (November)
|
11
|
கார்த்திகை (Karthikai)
|
1
|
30
|
11 வது மாதம்
|
1
|
30
|
12
|
டிசம்பர் (December)
|
12
|
மார்கழி (Markazhi)
|
1
|
31
|
12 வது மாதம்
|
1
|
31
|
No comments:
Post a Comment